ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009
இல்லை
நெடுந்தொலைவைக் கடப்பதற்கு பாதகங்கள் தேவையில்லை
நட்சத்திரங்களைப் பார்த்து கண்கள் கூசுவதில்லை
ஆகாயத்தின் விளிம்பில் காற்று இல்லை
ஆழ்நிலை பக்தியில் அரும்பொருள் இல்லை
பேரின்பத்தில் மயக்கமில்லை
ஆழ்கடலில் அலையில்லை
இருளில் கறை படிவதேயில்லை
துக்கத்தில் இழப்பு மீள்வதேயில்லை
சுயநலத்திற்கு வெட்கம் இல்லை
மயக்கத்திற்கு மானம் இல்லை
அடிமைக்கு அறிவு இல்லை
இறைமைக்கு பொருள் இல்லை
விளையா நிலத்திற்கு வேலி இல்லை
காகிதப் பூவில் தோற்றப்பிழை இல்லை
அழகிற்கு கவர்ச்சி இல்லை
வெள்ளி, 13 பிப்ரவரி, 2009
உன்னை எப்படி மறப்பேன்!!!
காதறுத்த ஆட்டின் காரைக் குட்டிக்கும்
மொண்டி ஆட்டின் குட்டிக்கும் கல்யாணம் !
எருக்கம் பூவில் மாலை!
ஊனாங்கொடியில் ஊஞ்சல்!
சுள்ளிப்பூ மனப்பந்தல்!
தகர டப்பா மேளம்!
இலைச் சுருட்டு நாதசுரம்!
இணையற்ற மகிழ்ச்சிக் களிப்பு....!
உன்னோடு கழித்த அந்தப் பொழுதைக்கூட
நெஞ்சில் சுமக்கிறேன், இன்னும்...,
உன்னை எப்படி மறப்பேன்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)